ரிஷப் பண்ட் விக்கட்டை விரைவில் வீழ்த்த நல்ல திட்டங்கள் உள்ளன – பேட் கம்மின்ஸ்..!!

இந்தியன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது..

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, இதை அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்- கவாஸ்கர்- தொடர்) தொடரில் ஆட உள்ளது, இந்த தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது இந்திய அணியின் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து தேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் சும்மின்ஸ் கூறியதாவது, ரிஷப் பண்ட் போட்டியில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்துபவர் ஆஸ்திரேலியாவில் அவர் இறுதியாக விளையாடிய போது அது அவருக்கு நல்ல தொடராக அமைந்தது. அவர் களத்தில் இருப்பது எங்கள் அணிக்கு ஆபத்தானது என்று எங்களுக்கு தெரியும் எனவே பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த நாங்கள் முயற்சி செய்வோம் எங்களிடம் சில நல்ல திட்டங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்..!!

Read Previous

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சித் தேர்தல் : வெளியான தகவல்..!!

Read Next

ஆயிரம் கோடியில் காலனி தொழிற்சாலை அமைக்க நவம்பர் 15 இல் அடிக்கல் மாட்டுகிறார் முதல்வர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular