காஞ்சிபுரம்: மாணவர்களுக்கு ரூ.12.53 கோடி கல்விக்கடனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று (அக்.13) வழங்கினார். நிகழ்வுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து நடத்திய விழாவில் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீமதி ஆகியோர் பங்கேற்றனர்.




