உத்தரப் பிரதேசத்தில், ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பெறும் நோக்கில் ப்ளே ஸ்கூல் உரிமையாளரான தனது கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டில் அவரது மனைவி தாமினி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசாரின் தகவலின்படி, கணவரின் மரணத்திற்குப் பிறகு பள்ளி வேன் ஓட்டுநருடன் சேர்ந்து வாழ திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளதுடன், இந்த வழக்கில் தாமினி மற்றும் பள்ளி வேன் ஓட்டுநர் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




