ரோஜா செடி ஆண்டு முழுவதும் பூக்க வேண்டுமா?.. இந்த எளிய பராமரிப்பு முறைகளை மறக்காதீர்கள்..!!

வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்படும் ரோஜா செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து, ஆண்டு முழுவதும் அதிக அளவில் பூக்க சரியான பராமரிப்பு மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் வரை நேரடி சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் ரோஜா செடியை வைத்தால், அதன் வளர்ச்சியும் பூக்கும் திறனும் அதிகரிக்கும்.

 

அதேபோல், மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு மிதமான அளவில் மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிகப்படியான நீர் வேர்களை பாதிக்கும் என்பதால், தேவைக்கேற்ப மட்டுமே நீர்ப்பாசனம் செய்வது நல்லது. வாடிய பூக்கள் மற்றும் உலர்ந்த கிளைகளை அவ்வப்போது அகற்றினால், புதிய தளிர்களும் அதிக மொட்டுகளும் உருவாகும்.

 

ரோஜா செடிக்கு ஊட்டச்சத்து வழங்க வெங்காய தோல், நன்றாக பொடித்த முட்டை ஓடு மற்றும் தேயிலை கழிவு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். இவை மண்ணின் வளத்தை அதிகரித்து செடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயை அவ்வப்போது தெளித்து பராமரித்தால், ரோஜா செடிகள் புத்துணர்ச்சியுடன் வளர்ந்து, உங்கள் தோட்டம் ஆண்டு முழுவதும் வண்ணமயமான பூக்களால் குலுங்கும்.

Read Previous

BMW அதிரடி முடிவு.. 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்..!!

Read Next

வரலாறு படைத்த டிபிஎஸ் வங்கி.. உலகின் சிறந்த கார்ப்பரேட் வங்கி என்ற பெருமை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular