நடிகைகள் என்றாலே பெரும்பாலும் 30 வயதுக்கு மேல் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் பெரியளவில் கிடைக்காது. ஒரு சில நடிகைகள் மட்டும் தான் 30 வயதிற்கு மேலும் இன்னும் முன்னணி நடிகையாகவே இருக்கின்றனர். அப்படி கிடைத்தாலும் அக்கா அல்லது அம்மா வேடங்கள் தான் கிடைக்கும். இதன்காரணமாகவே நடிகைகள் 30 வயதை தாண்டிவிட்டாலே திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவார்கள். அந்த வகையில் 35 வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் முன்னணி நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
35 வயதுக்கு மேல் ஆன பின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வரும் தமிழ் சினிமா நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம். கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதே போல நடிகை கிரண் ரத்தோட் (43), நடிகை தபு (52), நடிகை பூனம் பஜ்வா (39), த்ரிஷா (41), சுருதிஹாசன் (38), நக்மா (50), கோவை சரளா (60), ஆண்ட்ரியா (38) ஆகியோர் இன்னும் திருமணம் செய்துள்ளவில்லை.




