வாடிக்கையாளர்களை விளம்பரங்களின் மூலம் தவறாக வழி நடத்தியதாக Rapido நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ‘5 நிமிடத்தில் ஆட்டோ கிடைக்காவிட்டால் ரூ.50 கேஷ்பேக்’ என கூறி, பணத்திற்கு பதிலாக காயின்களை வழங்கியதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 பணமாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அபராதத்துடன் சேர்த்து, தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும் ஆணையிட்டுள்ளது.




