Oplus_131072
*வாதம், பித்தம், கபம் (சிலேத்துவம்)*
என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள்.
உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த்தாதுக்கள் அவை.
இந்த *வாத பித்தம் கபம்* குறித்த அடிப்படை அறிவு நமக்கு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
இந்த *வாதம்* , நம் உடலின் இயக்கத்தைதசை,மூட்டுக்கள்,எலும்பு, இவற்றின்பணியை,சீரானசுவாசத்தை சரியான, மலம் கழிப்பதை, எல்லாம் பார்த்துக் கொள்ளும்.
இந்த *பித்தம்* ,தன் வெப்பத்தால் உடலை காப்பது.இரத்த ஓட்டம்,மன ஓட்டம்,சீரண சுரப்புகள்,நாளமில்லா சுரப்புகள்,போன்ற அனைத்தையும் செய்வது.
*கபம்* உடலெங்கும் தேவையான இடத்தில்,நீர்த்துவத்தையும்,நெய்ப்புத்தன்மையையும்,கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது.
இந்த மூன்று *வாத,பித்த,கபமும்* சரியானகூட்டணியாய்,பணிபுரிந்தால் உடம்பு *ஆரோக்கியமாக* இருக்கும்.
இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய *உணவு* , ரொம்ப முக்கியம். *மனமும்,பணியும்* கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது.
ஒருவருக்கு *மூட்டு வலி* உள்ளது. *கழுத்துவலி*எனும்,ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், *வாதம்* சீர் கெட்டு உள்ளது என்று பொருள்.
இந்த வியாதிக்காரர்கள் *வாதத்தை* குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும்.
*வாதத்தைக் கூட்டும் உணவுகள்:*
புளி, *உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை,துவரம்பருப்பு, கடலைப்பருப்பு,வாழைக்காய், கொத்தவரை,காராமணி, குளிர்பானங்கள்*, செரிமனத்திற்கு சிரமம் தரும் *மாவுப்பண்டங்கள்* வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும்.
*வாயுவை வெளியேற்றும் உணவுகள்.*
*இலவங்கப்பட்டை,மிளகு,
புதினா,பூண்டு,சீரகம்,முடக்கறுத்தான் கீரை* இதனை உணவில் சேர்ப்பது *வாதத்தை* குறைத்திட உதவும்.




