தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உயர் அதிகாரிகள் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். நொய்டாவில் உள்ள சிஆர்பிஎப் தலைமையகத்தில் இருந்து வந்த டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், பெங்களூரு சிஆர்பிஎப் கமாண்டன்ட் மனோஜ் குமார் ஆகியோர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடுகளின் தரம் மற்றும் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்தனர்.




