உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரிய பாறை ஒன்று இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை உருண்டு வந்து, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




