இங்கு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாதி பேர் நீட் எழுதினால் மீதிப்பேர் jee எழுதுகிறார்கள். அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஏதேனும் ஒரு தேர்வை எழுத வைக்கத்தான் செய்கிறார்கள். கலந்த ஜனவரி பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுக்கு பிப்ரவரி மாதத்தின் போது முடிவுகள் வெளியானது.
இரண்டாவது கட்டமாக முதல் நிலை தேர்வு கடந்த 2 தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் இந்தியா முழுவதும் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் IIT, NIT போன்ற பல்கலைக்கழகங்களில் UG பொறியியல் படிப்புகள் படிக்க முடியும்.
இதற்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு எழுத வேண்டும். இரண்டாவது கட்டமாக நடந்து முடிந்த தேர்வுக்கு இன்று முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியிலும் தேர்ச்சி பெற முடியாமல் இருக்குமானவர்கள் சோகத்திலும் இருக்கின்றனர். முடிவுகளை என் டி ஏ வின் தளத்தில் சென்று பார்க்கவும்.



