ஐபிஎல் ஆரம்பித்து அனைத்து அணிகளும் பாதி போட்டிகளை விளையாடி முடிக்கின்ற தருவாயில் இருக்கின்றது. இந்த நேரத்தில் பல அணிகள் முதல் நான்கு இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றது. ஒரு சில அணிகள் பரிதாபமாக கடைசி இடங்களில் இருக்கின்றது. ஆனால் அடுத்து வரப்போகும் போட்டிகளில் என்ன வேணுமானாலும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் முதல் நான்கு இடத்தை பிடிக்கலாம் என்ற சூழ்நிலை அமைந்துள்ளது.
அந்த வகையில் இன்று ஜெய்பூரில் ராஜஸ்தான் அணிக்கும் லக்னோ அணிக்கும் போட்டி நடக்கவிருக்கிறது. இதுவரை 7 போட்டிகளை விளையாடிய ராஜஸ்தான் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது. இனி வரும் அனைத்து போட்டிகளும் ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா இல்லை சாவா என்னும் போட்டிகள் தான்.
இதனிடையில் கடந்த 16ஆம் தேதி நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்தும் வெளியேறினார் அவர். இதன் காரணமாக இன்று லக்னோ உடன் இருக்கும் போட்டியில் இவர் விளையாடுவாரா என சந்தேகம் இருந்து வருகிறது.



