2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே மற்றும் ரூ.10 கோடி தொகையை வழங்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஆயுஷ் மாத்ரேவை அணியிலிருந்து விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் விரும்பவில்லை என்றும், இதனால் மாற்று வழிகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு அணிகளும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், ஐபிஎல் அணிகளுக்கிடையேயான வீரர் பரிமாற்றம் குறித்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




