Oplus_131072
ஹீமோகுளோபின் என்பது மனித உடலுக்கு தேவையான அளவு இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு காய்ச்சல் மற்றும் ஏதாவது உடல் தொந்தரவுகள் நோய்கள் வரும்போதும் இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது ஹீமோகுளோபின் அளவு கம்மியாக உள்ளது என்று பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம்.இந் நிலையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு பலவிதமான முறைகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஒரு முறையைப் பற்றி தற்போது பார்க்கலாம். இதை மட்டும் செய்தால் போதும் ஒரே இரவில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
முதல் நாள் இரவே ஒரு பீட்ரூட்டை இரண்டு பாதியாக கட் செய்து அதன் ஒரு பாதியை சிறிது சிறிதாக நறுக்கி அதற்கு ஏற்றவாறு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஊற விடுங்கள். காலை எழுந்தவுடன் ஊற வைத்த பீட்ரூட் தண்ணீரை வடிகட்டி குடித்து வர, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.




