கழுதை பால் உடலுக்கு நல்லதா..?? கெட்டதா..?? கழுதை பால் சாப்பிட்டு உள்ளீர்களா..??

Oplus_131072

கழுதை பால் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது இன்றளவும் கூட பலருக்கும் தெரியாது. மற்றும் கழுதை பாலில் இருக்கும் நன்மைகளும் பலருக்கும் தெரியாது. இதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இத்தாலி பெல்ஜியம் ஜெர்மனி போன்ற நாடுகளில் கழுதைகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

 

கழுதை பாலை குறித்து தேசிய ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், இந்தப் பாலில் உடல் பருமன். புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நன்மைகள் உள்ளன என தெரியவந்துள்ளது.இந்தக் கழுதை பாலில் உள்ள கேசின் மற்றும் பாலாடையில் உள்ள புரதச் சத்துக்கள் கட்டிகளை உருவாக்கக் கூடிய உயிரணுக்களுக்கு எதிரான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பால் மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கு எதிரான ஒரு சிறந்த பால் என்று கூறப்படுகிறது.

கீல் வாதத்திற்கு சிகிச்சை அளிக்க இந்த கழுதை பால் பயன்படுகிறது. இந்த கழுதை பாலில் உள்ள நன்மைகள் தாய்ப்பாலுக்கு ஒத்த நன்மைகளை கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்த பாலில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளது. ஒரு லிட்டர் கழுதை பாலில் 16 மில்லி கிராம் எண்ணெய் சேர்ப்பது அந்த பாலை பசுவின் பாலை விட சிறந்த பாலாக மாற்றுகிறது. இந்த கழுதைப்பால் எலும்புகளை வலிமையாக்கவும், கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இந்த கழுதை பால் குறைந்த கொழுப்பை கொண்டதாகும். 100 கிராம் கழுதை பாலில் வெறும் 8.6 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. பசுவின் பாலை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.

எனவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது ஒரு சரியான பானமாக உள்ளது. மேலும் இதில் உள்ள லினோலிக் அமிலத்தின் பங்கு எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

பெர்டுசிஸ் அல்லது ஹூப்பிங் இருமல் என்பது போர்ட்டெல்லா பெர்டுசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் சுவாசக்குழாய் தொற்று நோய் ஆகும். சூடான் நாட்டில் இந்த கழுதைப் பாலை அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, வூப்பிங் இருமல் சிகிச்சையில் அடிக்கடி பயன்படுத்துகிறது.

மேலும் இந்த பாலில் நோய் எதிர்ப்பு பண்புகள், நமது உடலில் பாக்டீரியா காரணமாக ஏற்படும் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

கழுதைப் பாலில் ஆக்ஸிஜனேற்ற செயல்திறன் உள்ளது. மாட்டுப் பாலுடன் கழுதைப் பாலை ஒப்பிடும்போது, கழுதை பாலில் திறன் அதிகம் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கழுதை பாலை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை ஆக்ஸிஜனேற்றுவதன் மூலமும், செல்கள் சேதமடைவதைத் தடுப்பதன் மூலமும் நமது வயதைக் குறைக்க உதவுகிறது.

கழுதைப் பாலில் சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய் சேர்ப்பது, தாய்பாலுக்கு ஒத்த நன்மைகளை கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலுடன் ஒப்பிடும்போது இந்த கழுதைப் பாலில் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன.

மேலும் இதில் தாய்ப்பாலை விட அதிகப் கலோரிகள் மற்றும் தாதுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த கழுதைப்பால் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Read Previous

உங்கள் சருமம் வறட்சி இல்லாமல் பளபளவென மின்னணுமா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!!

Read Next

ஹீமோகுளோபின் அளவு ஒரே இரவில் அதிகரிக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular