ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் இன்று மாலை 3:30 மணியளவில் ஹைதராபாத் அணிக்கும் டெல்லி அணிக்கும் விசாகபட்டினத்தில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத், முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது. கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் 163க்கு 10 விக்கெட்டுகளை விட்டு 18.4 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இதில், அணிக்கெட் வெர்மா என்னும் வீரர் 74 ரன்கள் எடுத்து அசத்தினார். அனால் மத்த வீரர்கள் அவருக்கு கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் டெல்லி அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை எடுத்து ஹைதராபாத் அணியை பந்தாடினார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய டெல்லி அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென் ஆப்பிரிக்கா அணி வீரர் பாப் டு பிளேஸிஸ் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை கொடுத்ததால் இலக்கை 16 ஓவரிலேயே பூர்த்தி செய்து ஹைதராபாத் அணியை டெல்லி அணி வென்றது.




