கர்நாடகா: கோரமடுகு கிராமத்தை சேர்ந்த தம்பதி நாராயணசாமி – ருக்மணி. இவர்களின் 15 வயதான மகளுக்கு 45 வயதான மஞ்சுநாத் என்பவருடன் அண்மையில் கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. ருக்மணி, நாராயணசாமியின் இரண்டாவது மனைவி என்ற நிலையில் அவரின் சம்மதம் இல்லாமல் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. நாராயணசாமி தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி திருமணத்தை நடத்தியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.




