IND vs ENG 1st T20: முதலாவது பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்?.. பிட்ச் யாருக்கு சாதகம்?..

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ஆடவர் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது T20 போட்டி நாளை (ஜனவரி 22)  ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பிட்ச் ரிப்போர்ட் :

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் முழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச். மேலும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கே இரவில் பனிப்பொழிவு ஏற்படுவதால் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இரண்டையும் பந்து வீச்சாளர்கள் நன்கு பயன்படுத்த இயலும்.

வானிலை ரிப்போர்ட் :

இந்த போட்டிக்கு வானிலை நிலவரம் கை கொடுக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதாவது, வானம் மேகமூட்டத்துடன் இருக்குமே தவிர 25 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மணிக்கு 19 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் 60 % ஈரப்பதத்துடன் மைதானம் இருக்கும். இதனால், மழைக்கு 10% வாய்ப்பு உள்ளது.

Read Previous

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதலீடு திட்டம்..!! வட்டி மட்டுமே இவ்வளவு கிடைக்குமா?..

Read Next

15 வயது சிறுமிக்கு 45 வயதான நபருடன் கட்டாய திருமணம்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular