கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உஷா (56), அவரது மகன் கலாதரன் (36), மற்றும் கலாதரனின் குழந்தைகள் ஹிமா (6), கண்ணன் (2) ஆகியோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். மனைவி நயன்தாராவை பிரிந்து வாழ்ந்த கலாதரன் குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குழந்தைகளை பிரிந்துவிடுவோம் என்ற அச்சத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் மகனும் தற்கொலை செய்துகொண்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.




