காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 80 வயதான ஃபிராங்க் என்ற முதியவருக்கும், 20 வயதான ஜெசிகா என்ற இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இந்த தம்பதியருக்கு தற்போது குழந்தை பிறக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையுடன் தங்கள் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க இருவரும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.




