5 ஏக்கர் நன்செய் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்களும் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது நில விவரங்கள் கேட்கப்படாததால், தகுதியிருந்தும் பலருக்கு ரூ.1000 கிடைக்குமா என சந்தேகம் எழுந்தது. ஆனால், அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நவம்பர் மாதத்தில் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




