அடுத்து வரப்போகும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அந்த வகையில் பல நாடுகள் இதற்காக பயிற்சி பெற்று வருகின்றன. கடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இருந்தது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் தலைமையில் நாமதை வென்றதும் அனைவருக்கும் தெரியும்.
இப்போது 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக சீனா தனது கிரிக்கெட் அணியை உருவாக்கி வருவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். எப்போதும் ஒலிம்பிக்ஸ் என்றாலே சீனா தங்கப்பதக்கம் வெல்வதில் உன்னிப்பாக இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட்டிலும் தங்கப்பதக்கம் வென்றே ஆக வேண்டும் என்று அந்த அணி உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளாக ஆரம்பித்து ஒரு நாள் டி20 என மாரி இருக்கும் நிலையில் அடுத்து வரும் காலங்களில் டி10 உம் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் கிரிக்கெட் நான்கு ஃபார்மட்டுகளாக விளையாடப்படும் என்றும் அவர் கணித்துள்ளார். இது மட்டுமில்லாமல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீனா முதல் முதலாக கிரிக்கெட்டை மலேசியா உடன் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.




