திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நேற்றிரவு (ஜூலை 26) வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கான 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் நடைமுறையில் இருந்து விலக்கு, ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் ராணுவ வழித்தடம் அமைத்தல், கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.




