3 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்த வசூல் இத்தனை கோடியா?.. பொங்கல் ரிலீஸ் படங்களை முந்தியதா?..

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் மணிகண்டன். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் குடும்பஸ்தன். இப்படம் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படம் ரிலீஸாகி 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் குடும்பஸ்தன் படம் ரூ. 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். மேலும் இந்த வருட பொங்கலுக்கு வெளியான படங்கள் கூட மூன்று நாட்களில் இந்த அளவு வசூலை எட்டவில்லை என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் குடும்பஸ்தன் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

வாழ்க்கை ஜெயிக்கணுமா?.. அப்போ இந்த விஷயங்களுக்கு எப்பவும் வெட்கபடாதீங்க..!!

Read Next

YouTube சேனல்களுக்கு வந்த புதிய கட்டுப்பாடு..!! இனி யாரும் தப்பிக்க முடியாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular