இன்றைய காலகட்டத்தில் Youtube சேனல்கள் பெருகிவிட்டது. எல்லோருமே யூடியூப்பில் தங்களுக்கென்று ஒரு சேனல்களை உருவாக்கி Vlogs, cooking அது இது என்று போடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் யூடியூபில் அதிகமாக வருமானம் கிடைக்கிறது என்றும் சொல்லுகிறார்கள். இதனால் பலர் youtube சேனல் நடத்துவதை தங்களது முழு நேர வேலையாக செய்து வருகிறார்கள்.
அது போல மற்றொன்று Youtube சேனல்களில் ஆதாரம் அற்ற போலியான பல செய்திகளை பரப்புவார்கள். ஒருவர் ஒரு விஷயத்தை கூறிவிட்டால் அதில் உண்மை தன்மை இருக்கிறதா என்பது அறியாமல் அடுத்தடுத்த ஷேரிங் செய்து உலகம் முழுவதும் பரப்புவார்கள். இது பல பிரச்சனைகளைகளுக்கு வழி வகுக்கலாம்.
அதனால் தற்போது Youtube நிர்வாகம் Youtube சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அது என்னவென்றால் இனி தவறாக போலியாக செய்திகளை யார் பரப்புகிறார்களோ அவர்களது சேனலை முடக்கவும் அது மட்டுமல்லாமல் அவர்களது சமூக வலைத்தள பக்கங்களை சேர்த்து முடக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்து இருக்கிறது. இதனால் இது போன்ற வேலைகள் செய்தால் யாராலும் தப்பிக்க முடியாது. சரியான முறையில் சேனலை நடத்தினால்தான் youtube-ல் வருமானம் பார்க்க முடியும்.




