உத்தரப் பிரதேசம்: அலிபுரா கிராமத்தை சேர்ந்தவர் நசாகத் (55) இவருக்கு 2 மனைவிகள். இரண்டாவது மனைவி ஷஹீபா (32) வேறு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக நசாகத்துக்கு சந்தேகம் வந்தது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவியை சந்தேகப்பட்டார். இது குறித்த சண்டையில் மனைவியை அவர் கத்தியால் குத்தி கொன்றார். பின்னர் தானும் விஷம் குடித்தார். நசாகத் சிகிச்சையில் உள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.




