தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையைத் தொடந்து தற்பொழுது தமிழகத்தில் மீண்டும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..
தமிழகத்தில் இன்று நீலகிரி கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு அலாட் விடுத்துள்ளது. திண்டுக்கல், தேனி, சேலம், கரூர் மதுரை தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர், நாமக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது, இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளீட்ட 17 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது, மேலும் அக்டோபர் 4 நேற்று நாமக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதியான சேந்தமங்கலத்தில் கன மழை பெய்துள்ளது என பதிவாகியுள்ளது, மேலும் இன்று கனமழை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது..!!




