Oplus_16908288
40 வயதுக்கு மேல் ஆகும்போது பெண்களைக் கையாள ஆண்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
(சிறுவர்கள் குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்)
சில பெண்களுக்கு 40 அல்லது 50 வயதாகும்போது, அவர்களின் ஆளுமையில் ஏதோ ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்.
அவர்கள் தைரியமாகவும், அதிக கோபக்காரர்களாகவும், அதிக மத நம்பிக்கையுடனும், அதிக கவனம் செலுத்துபவர்களாகவும், அதிக கருத்து சுதந்திகம் உடையவர்களாகவும், அவர்கள் விரும்புவதைப் பற்றி அதிக ஆசைப்படுபவர்களாகவும் மாறுகிறார்கள்.
40/50 வயதை அடையும் முன்பு அடக்கமுடன், கீழ்ப்படிந்த பெண் இப்போது முற்றிலும் மாறும்போது ஆச்சரியப்பட வேண்டாம்.
குறிப்பாக அவள் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, இருந்த மனநிலை.
இந்த வயதில், அவள் தன வாழ்வின் ஓட்டத்துடன் செல்ல விருப்பப்படுவதில்லை. அவள் கேள்விகளைக் கேட்க துவங்குகிறாள்;
– தினசரி தேவைக்கு, செக்ஸ் என்ன உணவா?
– உங்களின் அறிவுகளில் உள்ள முரண்பாடுகள்
– நீங்கள் நடந்து கொள்ளும் விதமும் கூட கேள்வியாக்கப்படும்.
இனி வெளிப்படையாக பேசுவாள், தன் மனதில் பட்டதை பேச பயப்பட மாட்டாள்.
நீங்கள் அவளை கவனிக்கவில்லையென்றால், நீங்களே உணவு தயாரிக்க வேண்டியிருக்கும். துணிகளை துவைக்க வேண்டியிருக்கும்.
இனி அவளது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், உங்கள் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
பெண்களுக்கு 40/50 ஆக மாறுவதில் நிச்சயமாக ஒரு சிறப்பு இருக்கிறது.
உங்கள் அறிவுரைகளை அவள் கேள்வி கேட்கவில்லை என்றால், அமைதியாக கடந்து சென்றால், அவளுடைய தைரியம் மற்றும் மோதல் மனப்பான்மையை சந்திக்க தயாராகுங்கள்.
வீட்டில் மோதல்களையும், வேறுபாடுகளையும் தவிர்ப்பதற்கான ஒரே வழி, ஆண்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு, பெண்களின் தேவைகளுக்கு, உங்களின் அணுகுமுறைகளில் நியாயமான, போக்கை கடைபிடிப்பதுதான்.
இந்த வயதில், பெண்கள் வாழ்க்கையில் இதுவரை எடுத்த முடிவுகளுக்காக நிறைய வருந்துகிறார்கள் என்பதை ஆண்கள் மனதில் கொள்ள வேண்டும் … அவர்கள் தேர்ந்தெடுத்த கணவர்களும் அதில் ஒன்றாக இருக்கலாம்!
இந்த வயதில் ஒரு பெண் சிறந்த மற்றும் வித்தியாசமான அளவீடுகளை பயன்படுத்தி ஒரு ஆணை 100% சரியாக மதிப்பிடுவார்.
ஆண்கள் தங்கள் மனைவியுடனோ, முதலாளியுடனோ, அதிகாரியுடனோ வேலை செய்கையில், வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை கடந்து செல்வதற்கு தகுந்த பக்குவத்தில் இருக்க வேண்டும்.
நீங்கள் எதைப் கொடுக்கிறீர்களோ, அதுதான் கிடைக்கும்!
நீங்கள் அவளை நியாயமாக நடத்தியிருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இல்லையேல் உங்கள் இறுதி காலங்கள் திண்டாட்டம்தான். தனிமையில் தவிப்பீர்கள்.
எந்தவொரு காரணத்திற்காகவும் அவளது கடந்த காலத்தில் நீங்கள் அவ்வாறு அவளை தரக்குறைவாக நடத்தவில்லை என்றால் அவள் உங்களை நன்றாகப் பாதுகாக்க தொடங்குவாள். உங்கள் இறுதி நாட்கள் அமைதியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்.
40/50 வயது ஆகும்போது பெண்களை புரிந்துகொள்ளுங்கள் ஆண்களே..




