5 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
நமது தமிழகத்தில் பருவமழை மாற்றம் காரணமாக கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலை நேரம் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலையை நிலவி வருகிறது. அதனைத்தொடர்ந்து இன்று 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, இன்று ” தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ” ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.