வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சி பொங்க..!! இந்த இடத்தில் மட்டும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!!

 

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு வாஸ்து முறை கூறப்படுகிறது. மேலும் வாஸ்து சாஸ்திரங்களின்படி தான் இன்றும் பலர் அனைத்து விஷயங்களையும் கையாளுகின்றனர். வாஸ்து சாஸ்திரங்களின்படி திசைகள் என்பது மிகவும் முக்கியமாக கருதப்படும். அந்த வகையில் நெருப்பு நீர் காற்று வானம் மற்றும் பூமி என அனைத்திற்கும் தனித்தனி திசைகள் உள்ளது. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நீ சம்பந்தமான தொட்டிகளையும் நீர் பாத்திரங்களையும் வைப்பது குடும்பத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கும். வீட்டில் தண்ணீர் வைக்கும் இடம் சரியில்லை என்றால் கூட அந்த வீட்டில் பல குழப்பங்களும் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகளும் ஏற்படும். வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான இடத்தில் தான் நீர் வைக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் உள்ள குளியலறை கிழக்கு திசையில் நோக்கி ஒருபோதும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி சில விஷயங்களை கடைப்பிடித்தாலும் வீட்டில் உள்ள குழப்பங்களை நாம் தவிர்க்கலாம்.

 

வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். அந்த வகையில் சரியான இடத்தில் நீர் சம்பந்தமான பொருட்களை வைக்கவில்லை என்றாலும் செல்வம் சேர்வது தடைபடும். மேலே சொன்னவாறு வாஸ்து சாஸ்திரத்தின் படி அனைத்தையும் பின்பற்றினால் வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி பொங்கி அனைவரும் மன நிம்மதியுடன் வாழ்வார்கள்.

Read Previous

பெண்களே மறந்தும் சமையலறையில் இதை பண்ணிடாதீங்க..!! குடும்பமே சிக்கலில் தவிக்கும்..!!

Read Next

மகள்களுடன் ஆசிர்வதிக்கப்பட்ட அனைத்து அதிர்ஷ்டமான தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular