Oplus_131072
ஒரு இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் (500 ml) சேர்த்து சூடாக்கவும்.
அதில் –
1. கருவேப்பிலை – கையளவு
2. கரிசலாங்கண்ணி கீரை – கையளவு
3. நெல்லிக்காய் -2 (கொட்டை நீக்கியது)
4. வேப்பிலை – கையளவு
5. சின்ன வெங்காயம்-3 (சிறிதாக நறுக்கியது)
6. மருதாணி இலைகள் – கையளவு
7. செம்பருத்தி பூ – 10 (இதழ்கள் மட்டும்)
8. வெந்தயம்-1tbsp
9. ஓமம் – சிறிதளவு
10. பச்சை கற்பூரம்-1 சிட்டிகை
இவையனைத்தையும் நன்றாக காய்ச்சி அடுப்பை அணைத்த பின், இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு ஒரு காற்று புகாத பாட்டில்-இல் வடிகட்டி ஊற்றி வைக்கவும்..




