சமைக்காமல் சாப்பிடவே கூடாத உணவுகள் : சாப்பிடுவதனால் உடலிற்கு தீங்கு ஏற்படும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் காய்கறிகளை பச்சையாக உண்ணுவது மற்றும் பல உணவு பண்டங்களை பச்சையாக எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் அதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் கெடும் என்று யாரும் அறிவதே இல்லை..

இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள் பலரும் காய்கறிகளை உண்ணுவதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் கிடைப்பதாக கூறுகின்ற நிலையில் பச்சையாக சில காய்கறிகளை மற்றும் உணவு சாப்பிடும் பழக்கங்களை கைவிட வேண்டும் என கூறுகின்றனர்..

காலிபிளவர், பிரஸ்ஸலஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்த காய்கறிகளை ஒருபொழுதும் பச்சையாக உட்கொள்ளக்கூடாது இந்த காய்கறிகளில் ஜீரணிக்க கடினமான தன்மை இருப்பதாகவும் இதில் சர்க்கரை உள்ளது என்றும் உணவு நிபுணர்கள் கூறியுள்ளனர், இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் பல இரைப்பை பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர், அதேபோல் சமைக்காத உருளைக்கிழங்கினை ஒருபொழுதும் சாப்பிடக்கூடாது இதனால் நமது உடலில் செரிமான பிரச்சனை ஏற்படும் என்றும் கூறியுள்ளனர், இதேபோல் சிகப்பு பீன்ஸ் வகைகள் இவை வேக வைத்தோ அல்லது வேக வைக்காமலோ சாப்பிடக்கூடாது இதனால் நமது உடலில் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஏற்படும், அதேபோல் காளான் வகைகளை பச்சையாக சாப்பிடக்கூடாது அதனை சமைத்த பிறகு சாப்பிடுவதனால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடலுக்கு கிடைத்துவிடும், கத்திரிக்காய் பச்சையாக சாப்பிடுவதனால் குடல் இரைப்பை பிரச்சினை ஏற்படும், மேலும் பிரஞ்சு பீன்ஸ் சாப்பிடுவது நமது உடலுக்கு பெரிதும் ஆபத்தை ஏற்படுத்திம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்..!!

Read Previous

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ விரைவில் ரிலீஸ்..!!

Read Next

துறையூர் : புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த எம் எல் ஏ ஸ்டாலின் குமார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular