ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளை எவ்வளவு நேரத்தில் சாப்பிடலாம்..? மக்களே கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க..!!

 

நாம் அன்றாட வாழ்க்கையில் தினம் தோறும் வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அனைவர் வீட்டிலுமே ஏதாவது ஒன்றை ஃப்ரிட்ஜில் வைத்து தான் சாப்பிடுகிறோம். உணவுகளையும் சரி காய்கறிகளையும் சரி. குறிப்பாக இன்று சமைத்து மீதம் உள்ள உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து நாளையோ அல்லது நாளை மறுநாளோ கூட சாப்பிடும் நபர்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்த வகையில் குளிர்சாதன பெட்டிகள் வைக்கப்படும் உணவு எவ்வளவு நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு சில வீடுகளில் அரிசியை கூட இன்றைக்கு சமைக்க ஊறவைத்து விடுவார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் சமைக்காமல் அதை பிரிட்ஜில் வைத்து மறந்து இரண்டு நாள் கழித்து கூட சமைத்து சாப்பிடுவார்கள். இது முற்றிலும் தவறு. அதன்படி சமைத்த அரிசியே பிரிட்ஜில் வைத்தால் ஒரு நாளுக்குள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். மேலும், நமது எல்லோர் வீட்டிலுமே சப்பாத்தி மாவு என்பது மிச்சமாகும் நேரத்தில் அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஒரு சிலர் கோதுமை ரொட்டி செய்து மிச்சமானாலும் அதை அடுத்த நாள் சூடு பண்ணி சாப்பிட்டுக்கலாம். என்று எண்ணி அதை ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இந்நிலையில் இதை குறிப்பாக 12 மணி நேரம் டு 14 மணி நேரத்திற்குள் சமைத்த கோதுமை ரொட்டியை சாப்பிட வேண்டும். ஒரு சில வீடுகளில் சாம்பார் வைப்பதற்கு பருப்பு வைப்பார்கள். பருப்பு அதிகமாக வைத்துவிட்ட காரணத்தினால் சிறிது பறிப்பு எடுத்து பிரிட்ஜில் வைத்து அதை பிறகு யூஸ் செய்துக்கலாம் என்று எண்ணி கூட வைப்பார்கள். ஆனால் இஞ்சி இருக்கும் பருப்பை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது இரண்டு நாட்களுக்குள் கண்டிப்பாக சாப்பிட்டு முடிக்க வேண்டும். வெற்றியை காய்கறி பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை ஆறு மணி நேரத்திற்குள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் அனைவரும் வீட்டிலும் பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்களை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். இந்த காய்கறிகள் மற்றும் பழங்களை மூன்று நாட்கள் தான் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டும். பொதுவாகவே, குளிர்சாதன பெட்டியில் வைத்து சமைக்கப்படும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில்லை. எனவே மக்கள் அனைவரும் முடிந்த அளவிற்கு குளிர்சாதன பெட்டியில் வைப்பதை குறைத்து சத்தான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.

Read Previous

இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவு புளிக்காமல் இருக்கணுமா..? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

Read Next

கணவன் மனைவி உறவு என்பது வெறும் உறவு மட்டுமல்ல.. அது இரு உயிர்களின் பிணைப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular