ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை எப்படி உறுதி செய்வது..? அதன் அறிகுறிகள் என்னென்ன..?

 

குழந்தை என்பது ஒரு ஒரு வரம். திருமணமான தம்பதியர் அனைவரும் அந்த வரத்தை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாகவே பெண்கள் அனைவரும் அந்த வரம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் தனது சுய விருப்பத்தினால் குழந்தையை தள்ளி போட்டு விடலாம் இரண்டு வருடம் கழித்து கூட நாம் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் தனக்குத் தெரியாமலேயே பல விஷயங்களை பயன்படுத்த ஆரம்பித்த நாள் தான் குழந்தையின்மை, ஆண்மை குறைவு போன்ற விஷயங்கள் ஏற்படுகிறது.

குழந்தை இல்லாத காரணத்தினால் பல தம்பதிகள் பல குடும்பங்கள் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் விவாகரத்து என்ற முடிவில் தான் முடிகிறது. குடும்பம் என்று எடுத்துக் கொண்டாலே குழந்தை என்பது மிகவும் அவசியமான ஒன்று. திருமணமான தம்பதிகளுக்கு ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்து தான் கருத்தரித்தல் நிகழ்கிறது. திருமணமான பெண் கர்ப்பமாக உள்ளதை எப்படி கண்டறிவது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஒரு பெண் கருத்தரித்து விட்டால் மாசமாக இருக்கிறார் என்றால் அதற்கு மாதவிலக்கு தள்ளிப்போவதுதான் முக்கியமான ஒரு காரணம். மேலும், ஒரு சில பெண்களுக்கு ஒரு சில மாற்றங்கள் நிகழும். எந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் ஒரு சில பெண்களுக்கு திடீரென வாந்தி வருதல் மயக்கம், உடல் சோர்வு, ஏன் மார்பகத்தில் வலி இது போன்ற பல மாற்றங்கள் அவர்களின் உடலில் நிகழும். சிலருக்கு மார்பகம் சற்று பெரிதாகி காம்புகள் நிறத்தில் கருப்பாக மாறும். சிலருக்கு ஒரு மாற்றங்களும் நிகழாமல் சாதாரணமாக கூட இருக்கலாம். மாதவிடாய் தள்ளி போனாலே நாம் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் வரை பார்த்தால் நாம் கர்ப்பமாக இருப்பதை சில டெஸ்டுகள் செய்து அவர்கள் உறுதி செய்வார்கள்.

Read Previous

உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு..!! இந்த தண்ணீர் மட்டும் குடித்தால் போதும்..!!

Read Next

திருமணத்தில் டிஜே பாட்டுக்காக விருந்தினரின் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்..!! அதிர்ச்சி தரும் சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular