விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய இயக்குனர் போஸ் வெங்கட்..!! கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார்.மேலும் இவர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் எனவும் முடிவெடுத்து தன்னுடைய கட்சியினை ஆரம்பித்தார்.

இந்நிலையில் இவரின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று நடந்து முடிந்தது. இவரின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ளவே ஏராளமான தொண்டர்கள் வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தன்னுடைய கழகத்தின் கொள்கைகளை தொண்டர்கள் முன்பு கூறினார். மேலும் இவருடைய ஆவேசமான பேச்சு மற்றும் கருத்துக்கள் பலரையும் ஈர்த்துள்ளது.

இந்த மாநாட்டில் திராவிட அரசியல் என்று திமுக வை கடுமையாக விமர்சித்து பேசிய விஜய் குறித்து திமுக பேச்சாளரும் நடிகருமான இயக்குனர் போஸ் வெங்கட் பேசுகையில் யப்பா, உன் கூட எல்லாமா அரசியல் பண்ணனும்..பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு..குறைந்த ஞாபக சக்தி மற்றும் வியப்பு எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு என்ன வென்று பார்க்கலாம் என்று விஜய் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் இயக்குனர் போஸ் வெங்கட். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆத்திரத்தில் கொந்தளித்து வருகிறார்கள்.

Read Previous

BB8 தர்ஷா குப்தா எலிமினேட்..!! 20 நாட்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

Read Next

த.வெ.க மாநாடு எதிரொலி..!! ஆட்சியில் பங்கு வேண்டும்..!! தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கடிதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular