அதிகளவு மது அருந்திய நபர் ஒருவர் திடீரென கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (நவ. 04) அதிகளவு மது அருந்திய நபர் ஒருவர் மித மிஞ்சிய போதையில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மிக அதிக அளவில் போதையில் இருந்த அவர் திடீரென கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்து தத்தளித்தார். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் எழுந்து வரவே முடியவில்லை.
இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அந்த போதை ஆசாமியை மீட்டுள்ளனர் . தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




