சோகம்..!! மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..!!

அவினாசி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அரவிந்த்குமார் (வயது 26). இவர் கடந்த 10-ந் தேதி இரவு அவருடைய நண்பரான கார்த்திக் என்பவருடன் மங்கலத்தில் இருந்து அவினாசி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கார்த்திக் மோட்டார்சைக்கிளை ஓட்டினார், அரவிந்த்குமார் பின்னால் அமர்ந்து சென்றார். வஞ்சிபாளையம் அருகே சென்றபோது நிலைத்தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் படுகாயமடைந்த அரவிந்த்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் லேசான காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தொடர்ந்து டை அடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular