அடிக்கடி உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா உடனடி தீர்வு கிடைக்கும் இதோ உங்களுக்கு..!!

இன்றைய காலத்தில் பலரும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகும் காரணத்தால் அல்லது சாப்பிடும் உணவு முறை வேறுபாட்டால் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர்..

தூக்கமின்மை குறைய பேரீச்சை முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, கேரட், திராட்சை, தேங்காய் பால், கொத்தமல்லி, நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை குறையும், தூக்கமின்மை குறைய வெள்ளரி விதைகளை அரைத்து பாலில் குடித்து வர துக்கமின்மை குறையும், தூக்கமின்மை குறைய கொல்லங்கோவை செடியினை படுக்கை அறையில் கட்டி தொங்க விட்டால் தூக்கமின்மை குறையும், அதேபோல் ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்த சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும், மணலிக்கீரை துளசி வில்வம் மூன்றையும் பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட முடியும், ஆறைக்கீரை சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டு வருவதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை நிவர்த்தியாகும், வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட தூக்கம் ஆரோக்கியமாக வரும், ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை எடுத்து அதில் 250 மில்லி தண்ணீர் விட்டு நன்கு மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் பிறகு பால் மற்றும் தேன் கலந்து படு போகும் குடித்து வந்தால் நித்திரை நலமாக அமையும், சுரைக்காயை அரைத்து சாறு எடுத்து அதற்கு சம அளவு நல்லெண்ணெய் கலந்து நன்றாக இரவு உச்சந்தலையில் மீது நன்றாக தேய்த்து தடவி வந்தால் தூக்கமின்மை பிரச்சனை விரைவில் சரியாகும், கெட்டி தயிருடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட தூக்கமின்மை குறையும், தயிரை எடுத்து தலையில் தடை மசாஜ் செய்து வந்தால் தூக்கமின்மை குறையும் அதோட அதிகமாக தயிரை சாப்பிட்டு வருவது தூக்கம் வருவதற்கு மிக சிறந்தது, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலை எடுத்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து இரவில் குடித்தால் இரவில் ஆரோக்கியமான தூக்கம் வரும், சர்பகந்தா செடியின் வேரை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் பொடி கலந்த காலை இரவு சாப்பிட்டு பால் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும், நல்லெண்ணெய் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும், வெங்காயத்தை தோள் உரித்து அதில் சிறிதளவு உப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும் நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி கொள்ள வேண்டும் வெங்காயம் தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்..!!

Read Previous

உங்கள் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இந்த உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்..!!

Read Next

கண் உஷ்ணம் குறைய மற்றும் கண்ணில் ஏற்படும் எரிச்சல் குணமாக இதை படியுங்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular