பழனிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு..!! 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்..!!
ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் தரிசனம் செய்ய வருகின்றனர். நேற்று (நவ., 21) ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பழனி கோயிலுக்கு வந்திருந்தனர். மலைக் கோயிலில் கட்டணம், பொது தரிசன வரிசையில் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி கிரிவீதி, சந்நிதி வீதி, இட்டேரி சாலை, பூங்கா ரோட்டில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.




