YouTube சேனல்களுக்கு வந்த புதிய கட்டுப்பாடு..!! இனி யாரும் தப்பிக்க முடியாது..!!

இன்றைய காலகட்டத்தில் Youtube சேனல்கள் பெருகிவிட்டது. எல்லோருமே யூடியூப்பில் தங்களுக்கென்று ஒரு சேனல்களை உருவாக்கி Vlogs, cooking அது இது என்று போடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் யூடியூபில் அதிகமாக வருமானம் கிடைக்கிறது என்றும் சொல்லுகிறார்கள். இதனால் பலர் youtube சேனல் நடத்துவதை தங்களது முழு நேர வேலையாக செய்து வருகிறார்கள்.

Youtube இல் நல்ல நல்ல சேனல்கள் இருந்தாலும் நல்ல விஷயங்களை கூறினாலும் அதிகப்படியாக கெட்ட விஷயங்கள் தான் இருக்கிறது. இளைய சமுதாயத்தை கெடுக்கும் விஷயமாக பல வீடீயோக்கள் இருக்கிறது. தவறான வீடியோகள் வரும் போது விவரம் தெரியாத இளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதை பின்பற்ற வேண்டும் என்று தான் தோன்றும். எது நல்லது கெட்டது என்பது அவர்களுக்கு தெரியாது.

அது போல மற்றொன்று Youtube சேனல்களில் ஆதாரம் அற்ற போலியான பல செய்திகளை பரப்புவார்கள். ஒருவர் ஒரு விஷயத்தை கூறிவிட்டால் அதில் உண்மை தன்மை இருக்கிறதா என்பது அறியாமல் அடுத்தடுத்த ஷேரிங் செய்து உலகம் முழுவதும் பரப்புவார்கள். இது பல பிரச்சனைகளைகளுக்கு வழி வகுக்கலாம்.

அதனால் தற்போது Youtube நிர்வாகம் Youtube சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அது என்னவென்றால் இனி தவறாக போலியாக செய்திகளை யார் பரப்புகிறார்களோ அவர்களது சேனலை முடக்கவும் அது மட்டுமல்லாமல் அவர்களது சமூக வலைத்தள பக்கங்களை சேர்த்து முடக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்து இருக்கிறது. இதனால் இது போன்ற வேலைகள் செய்தால் யாராலும் தப்பிக்க முடியாது. சரியான முறையில் சேனலை நடத்தினால்தான் youtube-ல் வருமானம் பார்க்க முடியும்.

Read Previous

3 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்த வசூல் இத்தனை கோடியா?.. பொங்கல் ரிலீஸ் படங்களை முந்தியதா?..

Read Next

40 வீரர்கள்.. பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழுமையான பட்டியல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular