கோபத்தை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படித்து பாருங்கள்..
கோபத்தின் முக்கிய காரணி ஆன வெறுப்பை கைவிடுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். அவசரம் ஒருபோதும் வேண்டாம்.
நேர மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடனும் நேர்மையுடனும் குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் அது உங்களை மகிழ்ச்சியுடனும் அமைதியாகவும் வைத்திருக்கும் .
ஆழமான பெருமூச்சு விடுங்கள். எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ அதை பொறுத்து ஒன்று முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.
கோபம் வருகிறது என்று தெரிந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
முகத்தை கழுவுங்கள் அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ அதை பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.




