இல்லத்தரசிகளே கண்டிப்பாக இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!!

பப்படம்(அப்பளம்) பொரிக்கும் போது அப்பளத்தை 4,5 துண்டா உடச்சி பொரிச்சோம்ன்னா நெறைய Oil தேவைப்படாது.

கொத்தமல்லி(தனியா) பச்சையாவே வாங்கி கருவேப்பிலை சேர்த்து வறுத்து பொடி பண்ணி வச்சு கொஞ்சம் கொஞ்சமா சமையலுக்கு யூஸ் பண்ணுனா நல்ல மணமாவும்,டேஸ்ட்டாவும் இருக்கும்.

அதே போல வத்தல் மிளகாய் (காஞ்ச மிளகாய்) மொத்தமா வாங்கி வெயில்ல கொஞ்ச நேரம் காய வச்சிட்டு அப்புறமா பொடி பண்ணி கொஞ்சம் கொஞ்சமா சமையலுக்கு யூஸ் பண்ணுனா நல்லாருக்கும்.

சாம்பார் வைக்கும் போது துவரம் பருப்பு ,சின்ன வெங்காயம்,பூண்டு, தக்காளி எல்லாம் நல்லா மசிய வெந்ததும் ,காயம் காய்கறி சேத்து காய்கறி வெந்ததும் புளி கரைசல சேர்த்துட்டு தேவையான அளவு மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,மல்லிதூள் சேர்த்து கொதிக்க விட்டு மல்லிதளை சேர்த்து தாளிச்சி எடுத்தா கல்யாண வீட்டு சாம்பார் டேஸ்ட் கிடைக்கும்.

ரசம் வைக்கும் போது கடைசியா கொஞ்சம் வெல்லம் சேர்த்தா ரசம் இன்னும் டேஸ்ட்டா இருக்கும்.

மொத்தமா காய்கறி வாங்கிட்டு வந்தா காய்கறிய கேரட்,பீன்ஸ்,வெண்டைக்காய் ன்னு தனி தனி கவர்ல போட்டு ப்ரிட்ஜ் ல வச்சோம்ன்னா எடுத்து யூஸ் பண்ணுறதுக்கும் ஈஸியா இருக்கும். ரொம்ப நாள் கெட்டும் போகாம ப்ரஷ்ஷா இருக்கும்.

பச்சை மிளகாய் நெறைய வாங்கிட்டீங்கன்னா அத ஒரு பிளாஸ்டிக் டப்பால போட்டு வச்சா ரொம்ப நாளைக்கு ப்ரஷ்ஷா இருக்கும்.

மீன்குழம்பு மீந்திடுச்சின்னா மறுநாள் காலைல சூடுபண்ணுறதுக்கு முன்னாடி கொஞ்சமா புளிதண்ணி,உப்பு,மிளகாய்தூள்,மல்லிதூள் சேர்த்து கலந்து அடுப்புல சுண்ட வச்சி எடுத்தோம்ன்னா டேஸ்ட்டா இருக்கும்.

Read Previous

தலையணை இல்லாமல் உறங்கினால் உடலினுள் என்ன மாற்றம் நிகழும் என்று தெரியுமா..??

Read Next

ஒருமுறை உங்க வீட்ல நாட்டுக்கோழி ரசம் இப்படி செஞ்சு பாருங்க.. அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular