ஒருமுறை உங்க வீட்ல நாட்டுக்கோழி ரசம் இப்படி செஞ்சு பாருங்க.. அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Oplus_131072

 

தேவையான பொருட்கள்

நாட்டு கோழி – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 15

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 2

இஞ்சி பூண்டு – பேஸ்ட் -2 ஸ்பூன்

பட்டை, லவங்கம் – தலா 1

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

தனியாத்தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்

கருவேப்பிலை , மல்லி இலை – தேவையான அளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

மிளகு, சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன் பொடித்த மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.

இறக்கி வைத்து கருவேப்பிலை , மல்லி இலை தூவி பரிமாறவும். சிக்கன் ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்.

 

Read Previous

இல்லத்தரசிகளே கண்டிப்பாக இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!!

Read Next

நோய்கள் வராமல் காக்கும் அற்புத பானம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular