கோடைக்காலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, முக சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்-சி ஆகியவை சரும சுருக்கங்களை நீக்கி, முகப்பருக்களை குறைத்து என்றும் இளமையான தோற்றத்தை தருகின்றன. ரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தின் வறட்சியை போக்கும் இந்த இயற்கையான அமிர்தத்தை தினமும் குடித்து வந்தால், பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை எளிதாக பெறலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.




