கண்ணாடி பொருட்கள் பளபளக்க என்ன செய்ய வேண்டும்…?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
வீட்டில் உள்ள கண்ணாடி பொருட்களை எவ்வளவு தான் துடைத்தாலும் அது துடைத்த மாதிரியே இல்லை பழைய மாதிரியே இருக்கிறது என்று புலம்புவோம். இந்நிலையில் இந்த கண்ணாடி பொருட்களை துடைப்பதற்கு மார்க்கெட்டில் பல வகையான லிக்வீடுகள் வந்துவிட்டன. இருப்பினும் கண்ணாடி பொருட்களை பளபளப்பாக வைத்துக்கொள்ள வீட்டிலேயே இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். வீட்டில் உள்ள கண்ணாடி பொருட்கள் பளபளப்பாக இருக்க ஒரு தேக்கரண்டி சோப்பு பொடி மற்றும் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து தண்ணீரில் நன்கு கலக்க வேண்டும். இந்த கரைசலை பயன்படுத்தி கண்ணாடி பொருள்களை துடைத்தால் அவை புதிது போல் பளிச்சிடும்.




