பூஜை ஜாமான்களை எளிதாக சுத்தம் செய்யும் அற்புதமான வழி இதுதான்..!! இல்லத்தரசிகளே கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!
பொதுவாகவே பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதில் இல்லத்தரசிகளுக்கு அதிக வேலை இருக்கும். ஏனென்றால் பூஜை பாத்திரங்கள் குறிப்பாக விளக்கு போன்றவற்றை சுத்தம் செய்யும் போது அதில் எண்ணெய் பிசுக்கு போன்றவற்றை நீக்குவது மிகவும் சிரமமாக இருக்கும். இந்நிலையில் மார்க்கெட்டில் செயற்கையான ஸ்பிரே போன்ற பொருட்கள் பூஜை சாமான்களை சுத்தம் செய்ய வந்திருக்கிறது என்றாலும், வீட்டிலேயே இயற்கையான முறையில் மிகவும் எளிதாக எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் உள்ள பித்தளை மற்றும் காப்பரால் ஆன பூஜை பொருட்களை இனி கைவலிக்க சுத்தம் செய்ய தேவையில்லை. ஏனென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் லெமன் சால்ட், பாத்திரம் தேய்க்கும் ஜெல், உப்பு, வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். லெமன் சால்ட் டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும். இந்த கலவையில் பூஜை பாத்திரங்களை போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் எடுத்து தேங்காய் நார் கொண்டு தேய்த்து கழுவினால் பூஜை பாத்திரங்கள் பளபளக்கும். கண்டிப்பாக உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க..




