எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும் .. என்று உங்களுக்கு தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து விளக்கேற்றுவது என்பது பாரம்பரிய பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் ஒரு செயலாகும். இந்நிலையில் எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நெய் கொண்டு விளக்கு ஏற்றினால் செல்வம் சேரும் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் குடும்பத்தை ஆட்டி படைக்கும் அனைத்து பீடைகளும் ஒழியும்.
இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பேரும், புகழும் கிடைக்கும்.
வேப்பெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் வீட்டில் அமைதி குடிகொள்ளும்.
நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆகிய ஐந்து என்னை சேர்த்து தீபமேற்றினால் குலதெய்வத்தின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி என்னை கொண்டு விளக்கு ஏற்றக்கூடாது.




