குளிர்காலத்தில் நமது உடலை சூடாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மேலும் செரிமானத்தை பலப்படுத்தும் ஒரு முக்கிய உணவு தான் வெல்லம். அது குளிர்காலத்தில் சேரி கோடை காலத்தில் அதை உட்கொள்ளலாமா? அதை குறித்து இந்த பதிவில் காண்போம். கோடைகாலத்தில் அது நன்மை தர வேண்டும் என்றால் அதை நாம் அளவாக உன்ன வேண்டும்.
இது நமது உடலில் இரும்புச்சத்தை அதிகரித்து, செரிமானத்தை அதிகரிக்கிறது. அனால் கோடைகாலத்தில் வெல்லத்தை அதிகமாக உட்கொண்டால் பல தீமைகள் வந்து சேரும். ஏனெனில் இது நமது உடலில் சூட்டை அதிக படுத்தி உடல் எரிச்சல் பருக்களை அதிகரிக்கும். நீரிழிவு நொய்யலிகள் இதை கோடையில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
மேலும் இது இரத்த சக்கரை அளவை அதிகரிக்கும். இது சருமத்தில் தடுப்புகளை சிலருக்கு அதிகரிக்க தூண்டும். மேலும் என்னை பசையாக உங்கள் உடல் இருந்தால் இதை தவிர்ப்பது நல்லது. கோடையில் வெல்லம் சாப்பிட்டால் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை குறைத்துவிடும்.
ஆகையால் வெல்லத்தை ஒரு முறை அல்லது அளவை மிக குறைவாக உட்கொண்டால் தீமைகள் எதுவும் ஏற்படாது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து கிராம் அளவு வெல்லத்தை உட்கொள்வது நல்லது. இதை மோர் அல்லது எலிமிச்சையுடம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எரிச்சல் தவிர்க்கப்படும். மேலும் இதை பெருஞ்சீரகத்துடன் சேர்த்து உட்கொண்டால் செரிமானம் சேரி செய்யப்பட்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.




