ஞாயிற்று கிழமையன்று இப்படி சிக்கன் செய்து குடுத்தாள் யாரு தான் வேணாம் என்று சொல்லுவார்கள்..!! அனைவரும் பார்க்கவேண்டிய அருமையான செய்முறை..!!

ஞாயிற்று கிழமை வந்தாலே வீட்டில் என்ன அசைவம் செய்ய போகிறார்கள் என்றே நம் மனம் கேட்கும். ஏனெனில் அந்த விடுமுறை நாளில் நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில், சப்பாத்தி, நாண்,புல்கா,தோசை, சாதம் என அனைத்திற்கும் அருமையான சைட் டிஷ்ஷாக இருக்கும் இந்த ருசியான நீலகிரி சிக்கன் குருமாவை எப்படி வீட்டிலேயே செய்லாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானவை:

சிக்கன் – 1 கிலோ

நறுக்கிய பெரிய வெங்காயம் – 2

இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி

நறுக்கிய தக்காளி – 1

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

அரைப்பதற்கு தேவையானவை:

சீரகம் – 1 தே.கரண்டி

சோம்பு – 1 தே.கரண்டி

கசகசா – 1 தே.கரண்டி

பட்டை – 1 இன்ச்

ஏலக்காய் – 2

துருவிய தேங்காய் – 5 தே.கரண்டி

முந்திரி – 5

பச்சை மிளகாய் – 4

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

புதினா – 2 மேசைக்கரண்டி

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸியை எடுத்து அதில் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்த பின்பு, தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டையை சேர்த்து ஒரு நிமிடத்துக்கு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கியப்பின், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் நன்றாக  கிளற வேண்டும். பிறகு அதில், எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட வேண்டும்.  பின்னர் சிக்கன் ஓரளவு வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவிட்டு இறக்கவும். அவ்வளவுதான், சுவையான நீலகிரி சிக்கன் குருமா தயார்.

Read Previous

எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..??

Read Next

ஹைதராபாத்துக்கும் டெல்லிக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்..!! நடந்தது என்ன..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular