எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..??

 

மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.

அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.

ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.

எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.
தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.

நெய் தானம் – வீடுபேறு அடையலாம்.

தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.

 

பால் தானம் –சவுபாக்கியம்.

பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி.

தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.

வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.

பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.

தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும்.

தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும்.

 

 

Read Previous

அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

ஞாயிற்று கிழமையன்று இப்படி சிக்கன் செய்து குடுத்தாள் யாரு தான் வேணாம் என்று சொல்லுவார்கள்..!! அனைவரும் பார்க்கவேண்டிய அருமையான செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular