உளுந்து இல்லாமல் சுவையான சுலபமான முறையில் போண்டா..!! அசத்த வைக்கும் செய்முறை..!!

போண்டா நம் அனைவருக்கும் பிடித்த ஒரு தின்பண்டம். இதை செய்ய உளுந்து ஊற வைத்தே ஆகா வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தேவையே இல்லை. அப்படி சுலபமாக போண்டா எப்படி செய்வதென்று இப்பதிவில் காண்போம்.

தேவையானவை:

அரிசி மாவு – 1/2 கப்,

ரவா – 1 கப்,

மைதா – 1/4 கப்,

சமையல் சோடா – 1/2 ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

பச்சை மிளகாய் – 3,

வெங்காயம் -2,

இஞ்சி – சிறிதளவு,

கறிவேப்பிலை : ஒரு கொத்து,

தயிர் – 1/2 கப்,

கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்,

தண்ணீர் – தேவையான அளவு,

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரிசி மாவு, மைதா, ரவா மூன்றையும் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ள வேண்டும். அதற்க்கு பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துண்டுகள், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை போன்றவற்றை அதில் சேர்த்து, பேக்கிங் சோடாவை சிறிது சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பசை போன்ற பதத்தில் நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் போண்டா கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான், சூப்பரான போண்டா ரெடி.

Read Previous

மியான்மரில் தொடர்ந்து நடைபெறும் சோகம்..!! கொத்து கொத்தாக சாகும் மக்கள்..!!

Read Next

இந்த வகை சட்னியினை யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள்..!! மதுரை ஸ்பெஷல் தண்ணீர் சட்னி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular